• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு

ByA.Tamilselvan

Aug 23, 2022

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு
மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி, கோவை‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சி, டெல்டா மாவட்டங்கள்‌ புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, கோவை‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள்‌ புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, கள்ளக்குறிச்‌சி, கடலூர்‌, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌.
இன்று குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.