• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

புதின் உதவியாளரின் மகள் கார் குண்டு வெடிப்பில் பலி

ByA.Tamilselvan

Aug 22, 2022

ரஷ்யா அதிபர் புதினின் உதவியாளர் டுகின் மகள் தலைநகர் மாஸ்கோ அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில்
பலியானார் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோ அருகே நடந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அலெக்சாண்டர் டுகின் மற்றும் தர்யா டுகின் ஆகிய இருவரும் ஒரே காரில் வீடு திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அலெக்சாண்டர் டுகின் தனது பயணத்திட்டத்தை மாற்றியதால் தர்யா டுகின் மட்டும் காரில் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ள நிலையில் போலீசார் பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷியாவில் அதிபர் புதினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.