• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓ.பன்னீர்செல்வத்தின்துணைவியார் விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய குளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின்துணைவியாரின்விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் இருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில், இன்று ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜய் லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி திதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்து ஒன்றியம் நகரம் வந்து விஜயலட்சுமி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.
அதிமுக கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு எடப்பாடியுடன் உள்ள எட்டப்பன் கே. பி. முனுசாமி தான் காரணம். வாய்தான் அவருக்கு மூலதனம். அவர் ஏதேனும் கூறி குழப்பி கட்சியை அழிக்க பார்க்கிறார். அவர் நேருக்கு நேர் பேச தயாரா என்று வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சவால்.
தர்மயுத்தம் நடத்திய ஐயா ஓபிஎஸ் அவர்களை நயவஞ்சகமாக கூட்டு சேர்த்து பின்னர் காலை வாரி விட்டார் ஓபிஎஸ் உடன் இருந்த செம்மலை உட்பட யாருக்கும் சீட் தராமல் ஏமாற்றினார் எடப்பாடி. இனி எடப்பாடி திருத்த வேண்டும் என்றால் ஒன்றை கோடி தொண்டர்கள் தான் சேர்ந்து அவர்களை திருத்த வேண்டும். எனவே தொண்டர்களை குழப்ப வேண்டாம் என்று எடப்பாடிக்கு எச்சரிக்கை விட்டார் .இனி எடப்பாடி உட்பட அனைவரும் ஒதுங்கி விடுங்கள். ஐயா தலைமையில் கட்சியை நாங்கள் நன்றாக வழி நடத்துகிறோம். தற்பொழுது நீதிமன்ற தீர்ப்பு ஒன்னறை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாமல் ஆறு கோடி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
எனவே ஓபிஎஸ் அவர்கள் நடந்தவைகளை மறந்து விட்டு அனைவரும் ஒன்றாக இருந்து கட்சியை நன்றாக வழி நடத்தி எதிர்க்கட்சிகளுக்கு நல்ல பாடம் புகட்டுவோம் என்று கூறி இருந்த நிலையில், எடப்பாடி நீங்கள் எந்த வேலையும் செய்யவில்லை தேர்தல் நேரத்தில் தென் மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்தவில்லை என்று கூறி குற்றச்சாட்டு வைக்கின்றார் .


மேலும் அவர் கூறுகையில் ஓபிஎஸ் ஜானகி அணியை சேர்ந்தவர் என்று சேவலணி என்று கூறுகிறார் .ஆவலுடன் உள்ள தம்பிதுரை வளர்மதி உசேன் சி.வி சண்முகம் ஆகியோர் அனைவரும் ஜானகி அணியை சேர்ந்தவர்கள் எனவே அவர்களை நீக்குவாரா ?அம்மா இருந்தபோது ஐயா ஓபிஎஸ் அவர்களைத்தான் நிகழ்கால பரதன் என்று விமர்சனம் செய்துள்ளார்.உதயகுமார் நேரத்திற்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக்கொண்டு பேசி வருகிறார். ஐயா ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய பொழுது அவருக்கு 45 சதவீதம் பேர் ஆதரவாக இருந்ததால் அவரை நயவஞ்சமாக கூட்டு சேர்த்து தான் முதலமைச்சராகி , பின்னர் ஓபிஎஸ் அய்யாவை காலை வாரி விட்டுள்ளார். எனவே இவர்கள் அனைவரும் ஒதுங்கி விட்டால் நாங்கள் அய்யா தலைமையில் கட்சியை வழிநடத்தி திமுகவை ஜெயிப்போம் என்று கூறினார்.
மேலும் செய்தியாளர்கள் எடப்பாடி மற்றும் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோர் கூட்டு சேர அழைத்த பொழுது எடப்பாடி முடியாது என்று உள்ளதால் எடப்பாடி இல்லாமல் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோரை வைத்து கட்சியை நடத்துவீர்களா என்று கேட்டதற்கு ஐயா ஓபிஎஸ் என்ன கட்டளையிடுகிறாரோ அதன்படி செய்ய அனைத்து தொண்டர்களும் காத்துள்ளோம் என்று கூறினார்