• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிக்கலாம்!!

ByA.Tamilselvan

Aug 20, 2022

1,000 பாலோவர்களை வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒருவர் பதிவிடும் ரீல்ஸ் தங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில், இன்ஸ்டாகிராம் பயனர்கள் அவருக்கு ‘ஸ்டார்ஸ்’ (Stars) அனுப்பலாம். இந்த ஸ்டார்களை ரீல்ஸ் பதிவிட்ட அந்த நபர் பணமாக மாற்றிக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 1,000 பாலோவர்களை வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மட்டுமே இந்த ‘ஸ்டார்’ அம்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அப்டேட் மூலம் பணம் பெறுவதற்கு அந்த பயனர் இன்ஸ்டாகிராமிற்கு மெயில் அனுப்ப வேண்டும். பிறகு இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவர்களை தொடர்பு கொள்ளும். இதனை பயன்படுத்தி மொபைலில் இணைத்து இருக்கும் அவர்களது வங்கி கணக்கின் மூலம் பணமாக மாற்றிகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.