• Tue. Apr 30th, 2024

ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்வு..! இன்று முதல் அமல்

Byகாயத்ரி

Aug 18, 2022

இந்தியா முழுவதும் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான சேவை கட்டணம் உயர்த்துப்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் எளிதில் பணம் பெறும் பொருட்டு பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான அளவை வங்கிகள் நிர்ணயித்துள்ளன. அதன்படி கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 3 முறையும் சேவை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணமாக ஒவ்வொரு முறையும் ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சேவைக் கட்டணம் ரூ.20லிருந்து ரூ.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சேவைக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *