• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சும்-பாஜகவிலிருந்து விலகிய டாக்டர் சரவணனும்

ByA.Tamilselvan

Aug 14, 2022

மதுரையில் அமைச்சர் கார்மீது செருப்ப வீசிய சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகியுள்ளார் .
மதுரை திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, நேற்று பகல் 12 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.அமைச்சர் பி.டி.ஆர், பாஜகவினர் திரண்டிருந்ததைப் பார்த்து, இவர்களுக்கு இங்கே என்ன வேலை? இங்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. கட்சி சார்பில் பாஜகவினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்க முடியாது, பொதுமக்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திக் கொள்ளட்டும் எனக் கூறியுள்ளார். அமைச்சர் பி.டி.ஆர் அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டபோது, வாக்குவாதம் செய்த பாஜகவினர், அமைச்சரின் கார் மீது செருப்பு வீசினர்.


. இதை தொடர்ந்து பல்வேறு அரசியலி கட்சியினர் இதற்கு கடும் கண்டங்களை தெரிவித்தனர்.மேலும் மதுரை உட்பட தமிழக முழவதும் திமுகவினர் போராட்டங்களை நடத்தினர். மேலும் கண்ட ஊர்வலங்களை நடத்தி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்தனர். மேலும் பாஜக ரவுடிகளை கைது செய்ய வேண்டும், பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். தமிழக முழவதும் திமுக. பாஜக கட்சியினரிடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. திமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் அமைதிகாக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.


அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக மாவட்ட நிர்வாகிகள் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
இரவு 8 மணியளவில், இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தியாகியின் உடலை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேசுவதற்கு இது சரியான தருணம் இல்லை. பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.


பாஜகவினரின் கூட்டத்திற்குப் பின்னணியில் டாக்டர் சரவணன் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இரவோடு இரவாக நேரில் அமைச்சரை சந்தித்து மன்னிப்புக் கோரினார் சரவணன்.
பாஜகவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியல் பிடிக்காமல் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சரவணன் தெரிவித்தார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக மாலையில் ஆக்ரோஷமாக பேட்டியளித்த சரவணன் அடுத்த 8 மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை நேரெதிராக மாற்றிக்கொண்டது தமிழக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.