• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

Byகாயத்ரி

Aug 12, 2022

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தேனி திண்டுக்கல் தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று அறிவித்து மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.