• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஊராட்சி மன்றத் தலைவராகும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்

Byகுமார்

Sep 24, 2021

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்திலிருக்கும் கொத்தப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பழங்குடி சமூக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பதவிக்கு 44 வயதான ரோஜா என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இவரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முன்வரவில்லை என்பதால், பரிசீலனையிலும் அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கிறது. இதனால், போட்டியின்றி வெற்றிப்பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ரோஜா.

இவர் கொத்தப்பல்லி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்துவந்த ரோஜா, அதே ஊராட்சிக்குத் தலைவராகியிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோஜாவின் கணவர் ராஜா பால் வியாபாரம் செய்துவருகிறார்.
இவருக்கு 17 வயதில் சிவசக்தி என்ற மகனும், 14 வயதில் சிவப்பிரியா என்ற மகளும் இருக்கிறார்கள்.

இதைப்பற்றி அவரது கணவர் கூறும்போது, “எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மையானது.

எங்களைப் போன்றுதான் ஊராட்சியிலுள்ள மற்ற குடும்பங்களும் வறுமையில் இருக்கின்றன.

இந்த ஊராட்சியில் குடிநீர் வசதி, சாலை, தெருவிளக்கு என எந்த விதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. நாங்கள் சென்று கேட்டாலும் அலட்சியமாகப் பதில் சொல்லுவார்கள்.

இனியும் அப்படியான குறைகள் இருக்கக்கூடாது என்பதால்தான் மக்கள் என் மனைவிக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளனர்.

போட்டியே இல்லாமல் வெற்றிப்பெற்றிருப்பது மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது. கொத்தப்பல்லி ஊராட்சி மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் என் மனைவி நிறைவேற்றுவார்’ என்றார்.