• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகர் பாஜக மாவட்ட இளைஞர் அணி சார்பில் கையில் தேசியக்கொடி ஏந்தி நடை பயணம்…

Byகுமார்

Aug 9, 2022

நமது பாரதம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை தலைமை தபால் அலுவலகம் இருந்து அனைவரும் தேசியக்கொடி கையில் ஏந்தி அங்கிருந்து நடைபயணமாக தொடங்கி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து நேராக புறப்பட்டு மதுரை நேதாஜி ரோடு வழியாக வந்து, அங்குள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் டாக்டர் கோகுல் அஜித் தலைமையில் கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள் மற்றும் மதுரை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ஏர்போர்ட் கார்த்தி மற்றும் நவீன்பிரசாத் முன்னிலையிலும்,மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் சிறப்பு விருந்தினராக தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீனிவாச சோழன்கி மற்றும் பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம் எஸ் ஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கினார்.

பாரத பிரதமர் அறிவித்துள்ள ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் மற்றும் வணிக நிறுவனங்களின் தேசியக்கொடி ஏற்றி நமது பாரத நாட்டின் பெருமையை சுதந்திரத்தை போற்றுவோம் மற்றும் தியாகிகளை போற்றும் விதமாக நாம் அனைவரும் தேசிய கொடியினை ஏற்றி கொண்டாட வேண்டும். மற்ற முக்கிய விழாக்களை போல சுதந்திர தினத்தையும் கொண்டாட வேண்டும் என்றார். இதில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி அனைத்து நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.