• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பழமொழியும் அதன் சரியான அர்த்தங்களும்….

ByAlaguraja Palanichamy

Aug 6, 2022

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்

பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால் அதை மாமியார் பெரிதுபடுத்தி விடுகிறார் என்று பொருள் வருகிறது.

உண்மையான பழமொழி:

மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம், மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம்.

பொருள்: விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து உழைத்தால் பொன்னும் பொருளும் சேரும் என்பது அர்த்தம்.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்

பொருள்: ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு திருமணம் செய்து, சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆகிவிடுவான்.

உண்மையான பொருள்: கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான்.

  1. ஆடம்பரமாய் வாழும் தாய்
  2. பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன் 3. ஒழுக்கம் தவறும் மனைவி
  3. துரோகம் செய்யும் உடன்பிறப்பு
    5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை

இந்த ஐந்தும் கொண்ட எந்த குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.

ரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல

பொருள்: அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு தன் கணவனை கைவிட்டது போல.

உண்மையான பழமொழி: அரசினை என்பது அரச மரத்தைக் குறிக்கும், திருமணமான பெண்கள் பிள்ளை பேறு பெற அரசமரத்தை சுற்றுவது, கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரசமரத்தை சுற்றுவது பயன் தராது.