• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இன்றைய தங்கத்தின் விலையில் மாற்றமில்லை..!

Byவிஷா

Aug 5, 2022

இந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,865க்கும், சவரன் ரூ.38,920க்கும் விற்பனை ஆனது. இதேவிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்று காலையிலும் தொடர்கிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4865ஆக விற்கப்படுகிறது.
இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் நகர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை சரிந்தும், இரு நாட்களாக விலை அதிகரித்தும் இருக்கிறது. ஏறக்குறைய கிராமுக்கு 30 ரூபாயிலும், சவரனுக்கு 240 ரூபாயிலும் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தங்கம் விலை இனிமேல் படிப்படியாக அதிகரிக்குமா அல்லது விலை குறையுமா என்று ஊகிக்க முடியாத அளவில் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 பைசா குறைந்து, ரூ.63.60 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 சரிந்து, ரூ.63,600க்கும் விற்கப்படுகிறது.