• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கலங்கவைத்த விருமன் பட இயக்குநர் முத்தைய்யா..

சசிக்குமார் நாயகனாக நடித்த குட்டிப்புலி படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் முத்தைய்யா. அதனை தொடர்ந்து கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேற்கண்ட எந்தப் படத்திற்கும் தொடக்க விழா, ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது இல்லை. அதனை நேற்றைய விழாவில் நினைவுகூர்ந்த இயக்குநர் முத்தைய்யா பேசுகையில் இதுவரையிலும் ஐந்து படங்களை இயக்கியுள்ளேன். இந்தப் படங்களின் படப்பிடிப்புகளையும் நான் பிறந்து வளர்ந்த, படித்த மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் நடத்தியுள்ளேன். பிறந்த மண்ணில் நான் இயக்கிய படத்தின் விழாவை நடத்த வேண்டும் அதனை எனது தாய் தந்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான் விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சூர்யாவிடம் வேண்டுகோள் வைத்தேன். என் நீண்டநாள் ஆசையை நிறைவேறியது என கூறி தன் தாய் தந்தையை மேடையேற்றி அறிமுகப்படுத்திய போது திரையுலகினர் மட்டுமல்ல, பார்வையாளர்களும் கண்கள் கலங்கி பார்த்தனர்