• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மீண்டும் இயங்கும் சென்னை-லண்டன் விமான சேவை…

Byகாயத்ரி

Aug 1, 2022

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்த சென்னை – லண்டன் விமான சேவை 3 ஆண்டுகளுக்கு பின் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

அதன்படி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை வாரத்தில் 7 நாட்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹியாத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5.32 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும்.