• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

534 கிராமங்களில் 4ஜி சேவை…

Byகாயத்ரி

Jul 29, 2022

நாட்டில் பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர், கோவை, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கரூர்,மதுரை, நாகை நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங்களிலும், புதுச்சேரியில் ஒரு கிராமத்திலும் பிஎஸ்என்எல் 4ஜி மொபைல் சேவை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.