• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நேரில் சந்தித்துக் கொள்கிறார்களா?! தல – தளபதி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிவாஜி – எம். ஜி. ஆர், ரஜினி – கமல், விஜய் – அஜித் என ரசிகர்கள் தங்களுக்கு பிடிதமானவர்களை எப்போது கொண்டாடி வருகின்றனர்.கொண்டாட்டங்கள் சில சமயங்களில் எல்லைகளை மீறுவதும் உண்டு. ஆனால் நடிகர்கள் எப்போதுமே நல்ல நட்புடன்தான் உள்ளனர்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்போது டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வரும் அஜித், ஓய்வு நேரத்தில் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலவந்தது. மேலும் பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யசர்லோவை டெல்லியில் சந்தித்து பேசிய புகைப்படங்களளும் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

இந்தநிலையில்தான், பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கிற்க்காக நடிகர் விஜய்யும் டெல்லிக்கு சென்றிருக்கிறார்.
இருவரும் ஒரே சமயத்தில் டெல்லியில் இருப்பதால் இவர்கள் நேரில் சந்திக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.