• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அவதூறு பரப்பும் வகையில் சரவணபவன் ராஜகோபால் வாழ்க்கை படம் இருந்தால் நடவடிக்கை…

Byகாயத்ரி

Jul 27, 2022

சரவணபவன் ராஜகோபால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் படமெடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் கணேசன் என்பவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த ஜெய் பீம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் ஹிந்தியில் திரைப்படம் ஒன்றை எடுக்க உள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு ’தோசா கிங்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இந்த படத்தின் கதை சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கு சம்பந்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணபவன் நிறுவனத்தின் வழக்கறிஞர் கணேசன் என்பவர் இது குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் படம் எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.