• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

Byகுமார்

Sep 20, 2021

சமீபகாலங்களாக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சட்டம் வகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையத்தில் பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய போது திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற சோதனையை பத்திரிக்கையாளர் கள் படம் பிடித்து செய்தி சேகரித்தனர். அப்பொழுது தனியார் (சன்) தொலைக்காட்சி சேலம் மாவட்ட செய்தியாளர் எஸ்.டி.குமரேசன் நேரலையாக செய்தியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட கூட்டத்தில் இருந்த சிலர் அவரை கடுமையாகத் தாக்கியதோடு கேமராவையும் சேதப்படுத்தி உள்ளனர்.

பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும் என்பதை தமிழக அரசுக்கு வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர் யூனியன் மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு நாமக்கல் பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரிக்கையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்