• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பணி நேரத்தில் மது அருந்திவிட்டு பணியில் இருக்கும் ரயில்வே அதிகாரி !

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் கோட்டார் பகுதியில் உள்ளது. இங்கு உள்ள நாகர்கோவில் ரெயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ளது. இங்குள்ள பணியாளர்களில் தூய்மை பணியாளர்கள் மட்டுமே தமிழர்கள் ஏனைய அனைத்து பணியாளர்களும் மலையாள மொழி பேசுபவர்கள். இந்த நிலையை மாற்ற அனைத்து துறைகளிலும் தமிழர்களையும் பணி அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் ரயில்வே அதிகாரி பணி நேரத்தில் மது அருந்திவிட்டு பணியில் இருக்கும் வீடியோ பதிவு ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோட்டாறு இரெயில் நிலையத்தை பயன் படுத்தும் பயணிகளின் கோரிக்கை.