• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நான் ஏற்கனவே பொதுச் செயலாளர் தான்- சசிகலா

ByA.Tamilselvan

Jul 14, 2022
மயிலாடுதுறையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர்  நான்தான் என கூறியுள்ளார்.

மயிலாடுதுறையில் அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளரும் இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி என்பவர் தன்னம்பிக்கையுடன் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். மாணவி லட்சுமிக்கு ரூபாய் ஐந்தாயிரம், காப்பகத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும் சசிகலா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளராக போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு, நான் ஏற்கனவே பொதுச் செயலாளர் தான். அவர்கள்தான் சண்டை போடுகிறார்கள்’ என தெரிவித்தார்.
ஓ.பன்னீசெல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ‘பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’ என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது உட்கட்சிக்குள்ளே சண்டை போடுவதால் வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள், என்று கேள்வி எழுப்பினார்.