• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

செஸ் ஒலிம்பியாட்: மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ByA.Tamilselvan

Jul 12, 2022

செஸ்ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச”செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 11.30 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் “செஸ் ஒலிம்பியாட்” போட்டிக்காக மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். அவர் போட்டி நடை பெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்க்கு சென்று அங்குள்ள வளாகத்தில் அமைக்கப்படும் புதிய அரங்கத்தை பார்வையிட்டார். மேலும் போட்டி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அங்குள்ள அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒருங்கிணைப்பு குழுவுடன் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்ய நாதன், தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு, உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.