• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ByM.maniraj

Jul 8, 2022

கழுகுமலை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் பேவர்பிளாக் சாலைகள் அமைக்க பூமி பூஜை. கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி 2021 – 2022 ன் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலைகள் அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடந்தது. விழாவிற்கு கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ தலைமை வகித்து புதிய பேவர்பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
வேலாயுதபுரம் பஞ்சாயத்து தலைவர் சங்கரன், துணை தலைவர் ஜோதிசுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ் வரவேற்றார். தொடர்ந்து எம்எல்ஏ கடம்பூர் ராஜூ அருகில் உள்ள தொடக்கப்பள்ளி க்கு சென்று அங்குள்ள பழுதான ‌சமையலறை கட்டிடத்தை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, மாவட்ட அம்மா பேரவை அவைத்தலைவர் மாரியப்பன், மாவட்ட வர்த்தக பிரிவு காமராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், எம்ஜிஆர் மன்றம் ராமசுப்பு, வார்டு செயலாளர் மாரியப்பன், பூசாரி மாரியப்பன், செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி, அரசு ஒப்பந்தக் காரர்கள் புஷ்பராஜ், அய்யணன், தொழிலதிபர் மகேஷ், கிளை செயலாளர் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார், பஞ்சாயத்து கிளார்க் பூபதி, கழுகுமலை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.