• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தண்ணீர் பிடிப்பதில் தகராறு :பைனான்சியர் வெட்டிக் கொலை

By

Sep 16, 2021

சிவகங்கை மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்தவர் அழகுமலை. இவர், சென்னையில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் வேம்பத்தூரில் வசிக்கும் அழகுமலையின் தங்கை மாலா தேவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமிக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, அழகுமலை தனது சொந்த ஊரான வேம்பத்தூர் சென்றபோது முன்விரோதம் காரணமாக ராஜலட்சுமியின் கணவர் ராஜா மற்றும் அவரது சகோதரர் சுந்தரம் இருவரும் அழகுமலையை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தப்பியோடிய ராஜலட்சுமியின் கணவர் ராஜா மற்றும் அவரது தம்பி சுந்தரம் ஆகியோரை போலீசர் வலைவீசி தேடி வருகின்றனர்.