• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ்க்கு எதிராக தொடுத்த வழக்கு தள்ளுபடி…

Byகாயத்ரி

Jul 7, 2022

ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டுவர ஈபிஎஸ் தரப்பு முயன்ற நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் வெளியேறினர். அந்த பொதுக்குழுவிற்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி அளித்திருந்த மனுவின் மீதான விசாரணையின்போது பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளை தொடர்ந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 3 வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு மீது தடை கோரிய ஓபிஎஸ்ஸின் மனு இன்று பிற்பகல் விசாரிக்கப்பட உள்ளது.