• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அர்ஜுன்சம்பத் கொடும்பாவி எரிப்பு

Byகுமார்

Jul 7, 2022

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர்
அர்ஜுன்சம்பத் கொடும்பாவி எரித்தனர்
விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களை பற்றி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் தொல் திருமாவளவன் அவர்களை அவதூறாக பேசியதை கண்டித்து மாநகர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தலைமை நிலைய முதன்மை செயலாளர் ஏ வி பாவரசு தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கதிரவன்மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அர்ஜுன் சம்பத்தை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர் அர்ஜுன் சம்பத்தை தேசிய பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர் அதன் பின்னர் அர்ஜுன் சம்பத் உருவப் பொம்மையை எரித்தும் கம்பாலும் செருப்பாலும்
அடித்து விடுதலை சிறுத்தைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.