• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jul 5, 2022

இந்தியாவில் ஒரு நாளைக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்ப சக்தியைக் கொண்டு உலகம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுவதும் மின்சாரம் வழங்க இயலும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மின்சாரத்தேவை முழுமையடைய வேண்டுமானால் ஒரு மனிதனுக்கு வருடத்திற்கு 3000 யூனிட் மின்சாரம் தேவை. இந்தியாவில் தற்போது சராசரியாக ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மின்சாரம் 800யூனிட்கள்.
ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பில்கிடைக்கும் சூரியவெப்பம் கொண்டு 700 வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும்.
7வாட்ஸ் L.E.D.பல்ப் தரும் ஒளி = 18 வாட்ஸ் C.F.L.BULB தரும் ஒளி = 40 வாட்ஸ் Tubelight தரும் ஒளி = 60வாட்ஸ் குண்டு பல்ப் தரும் ஒளி.
எனவே. L.E.D பல்ப் அதிகம் உபயோகத்திற்கு வந்தால் மின்சார செலவு கணிசமாகக் குறையும்.

ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு 0.5 கிலோ நிலக்கரி எரிக்கப்படுகிறது. அதிலிருந்து 1.5கிலோ கார்பன் டை ஆக்சைட் வெளியேறுகிறது.இதனால் நமது சுற்று சூழல் கணிசமாக பாதிக்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரம்,நிலக்கரி மூலம் தெர்மல் நிலையங்களில் 70%ம் ,அணுமின் நிலையங்கள் மூலமாக 15%ம் ,நீர் மூலமாக 5%ம் முறைசாரா வழிகளில் காற்றாலை மூலமாக 3%ம்,சூரிய சக்தியின் மூலம் 1மூம் பயோ சிஸ்டத்தின் மூலம் 1%ம்கிடைக்கிறது