• Tue. Apr 30th, 2024

இலங்கையிலிருந்து ராமேஷ்வரம் வந்த பெண் உயிர் இழப்பு

Byகுமார்

Jul 4, 2022

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அந்நாட்டில் வாழ வழியில்லாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வரும் இலங்கை தேசத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் மணல் திட்டில் கடந்த ஜூன் 27ஆம் தேதி இரண்டு இலங்கை தமிழர்கள் 2 பேர் மயக்க நிலையில் மீட்கப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோவில் கடல் பகுதியில் கடற்கரை மணல் திட்டில் மயக்க நிலையில் கிடந்த இலங்கை கொள்ளர்ஸ்ரீகுளத்தை சேர்ந்த பெரியண்ணன் என்ற 82 வயது முதியவரும், பரமேஸ்வரி என்ற 70 வயது மூதாட்டியையும் மரையன் போலீசார் மீட்டனர்.
வயதான பெண்ணின் நெற்றியில் காயம் இருந்ததால் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் முதியவர் கண் திறந்த நிலையில் மூதாட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் மருத்துவமனையில் மயக்கு நிலையிலேயே இருந்தார். இதனால் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இலங்கையில் இருந்து கடந்த 27ஆம் தேதி அகதிகளாக வந்த வயதான தம்பதியினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பரமேஸ்வரி மரணமடைந்தார்.
தனுஷ்கோடி அருகே கடந்த 27ம் தேதி இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த 2 முதியவர்கள். உடல்நலக்குறைவு காரணமாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரமேஸ்வரி என்ற அகதி சிகிச்சை பலனின்றி உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *