• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வணிக பயன்பாட்டுக்கு சிலிண்டர் விலை குறைப்பு…

Byகாயத்ரி

Jul 1, 2022

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன.அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2,373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன. அதன்படி, 2,373 ரூபாயாக இருந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை தற்போது 2,186 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளதால் ஹோட்டல், டீ கடை உள்ளிட்டவற்றின் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.