• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படத்தை கிழித்த நிர்வாகிகள்

Byகாயத்ரி

Jun 27, 2022

திமுகவின் பி-டீம் ஆக செயல்படும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை.

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓ.பன்னீர் செல்வத்தின் உருவப் படத்தை தொண்டர்கள் கிழித்தனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் புகைப்படத்தை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கட்சி பதாகைகளில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பின்னீர்செல்வம் உருவ படம் இடம் பெற்றிருந்தது. இந்த பதாகையில் இருந்த படத்தை நிர்வாகிகள் கிழித்தனர். பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலாளருமான அன்பழகன் பேசியதாவது, அதிமுகவிற்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் சதி செயலை எடப்பாடி பழனிச்சாமி முறியடித்துள்ளார்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறித் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற திமுகவின் பி-டீம் ஆக செயல்படும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவித்துள்ளார்.