• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லை

ByA.Tamilselvan

Jun 26, 2022

குடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முா்முபோட்டியிடு கிறார். ஆனால் அவரது கிரா மத்துக்கு இன்னமும் மின்சார வசதி கிடைக்கவில்லை.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அமைந்தி ருக்கும் அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் முர்முவின் சகோதர ரின் மகன் உள்பட 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. முர்முவின் பெரிய சகோதரர் பகத் சரண் டூடு, இறந்து விட்டார். அவரது மகன் பிராஞ்சி நாராயண் டூடு, தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அந்தக் கிரா மத்தில்தான் வசிக்கிறார். இன்றும், மாலை இருட்டியதும், மண்ணெண்ணெய் விளக்கைக் கொண்டுதான் வீட்டுக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். திரௌபதி முர்மு குசுமி பகுதியில் உள்ள உபெர்பெடா கிராமத்தில் பிறந்தார். அங்கும் அதன் அருகில் உள்ள துன்கிர்சாஹி பகுதியிலும் இன்னும் மின்சாரம் இல்லை. தங்கள் மொபைல் போன்களை சார்ஜ் செய்ய அருகில் உள்ள படாசாஹி பகுதிக்கு தான் செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.