• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு

ByA.Tamilselvan

Jun 21, 2022

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே மோதல் முற்றி வரும் நிலையில் 8-வது நாளாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இருவரையும் தொண்டர்கள், நிர்வாகிகள் சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பட்டியலில் 12 மாவட்ட செயலாளர்கள் இருந்தனர். அதில் 2 மாவட்ட செயலாளர்கள் இன்று எடப்பாடி பழனிசாமி பக்கம் மாறி சென்றனர். நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். மேலும் மதுரை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவும் சந்தித்து பேசினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆதரவை ஏற்றுக் கொண்டார். இதே போல ஓ.பன்னீர்செல்வமும் அவரது வீட்டில் கூடியிருந்த தொண்டர்களை சந்தித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை ஆருத்ரா நேவிஸ் பிரபாகர், அமலன் சாம்ராஜ் ஆகியோர் சந்தித்தனர். அடுத்த கட்ட நகர்வு குறித்து 2 தலைவர்களும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.