• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

10 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக் குத்து பாடல்…

Byகாயத்ரி

Jun 16, 2022

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் அரபிக் குத்து பாடல் மே 19ஆம் தேதி வெளியானது. இந்த வீடியோ பாடல் தற்போது இசை பிரிவுக்கான இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் நான்காம் இடத்திலும், தமிழ் பாடல்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. யூடியூப்பில் இந்த பாடல் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து அசத்தியுள்ளது.