• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் 23 பவுன் தங்க நகைகள் கொள்ளை

ByA.Tamilselvan

Jun 10, 2022

மதுரையில் வீடு புகுந்து 23 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை பேச்சியம்மன் படித்துறை வி.பி. சதுக்கம் 2-வது தெருவை சேர்ந்தவர் தமிழரசன் மகன் மனோஜ் (வயது 24) என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவரது வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 23பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து மனோஜ் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.