• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விக்ரம் – வெளியான திரையரங்கில் பெரும் தீ விபத்து

ByA.Tamilselvan

Jun 8, 2022

கமல் நடித்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக முழுவதும் 200 கோடி வசூலை எட்டியதாகதகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் விக்ரம் படம் வெளியான திரையரங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் கமலின் விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது திரையரங்கில் திடிரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு திரையரங்கை விட்டு வெளியேறினர்.தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வருவதற்குள் திரை முற்றிலும் எரிந்து நாசமானது. முதல்கட்ட விசாரணையில் தீ விபத்திற்கு மின் கசிவு காரணம் என தெரியவந்துள்ளது.