• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு – முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு

ByA.Tamilselvan

Jun 7, 2022

தமிழக முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சூப்பர் ஆறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளன. வரும் ஜூலை கடைசி வாரத்தில் துவங்கி ஆகஸ்ட் மாத துவக்கம் வரை மாமல்லபுரத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கு உலக முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்
இந்நிலையில் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிபெறும் 2 மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட்டை நேரில் பார்க்க வாய்ப்பு அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அப்போட்டிகயில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/players என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் செஸ் ஒலிம்பியாட்போட்டியை தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.