• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கெத்தா, ஸ்டைலா.. அண்ணாத்த தரிசனம் கிடைச்சாச்சு!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பட்டு, வேட்டி சட்டையில் சும்மா கெத்தா, மாஸா சூப்பர் ஸ்டார் நடந்து வருவது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. விநாயகர் சதுர்த்தியில் தலைவர் தரிசனம் கிடைத்ததால் ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர். இதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிடவுள்ளது.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.