• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்

ByA.Tamilselvan

May 28, 2022

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்பு
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை இன்று மாலை குடியரசு துணைத் தலைவா் வெங்கை யா நாயுடு திறந்து வைக்கிறார்..
இதைத் தொடர்ந்து கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று உரையாற்றுகிறார்..அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.