• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறை

ByA.Tamilselvan

May 22, 2022

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளியில் பயிலும் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு spoken English பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி வழங்க ஆங்கிலப் புலமை வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்கிறது. ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கில புலமையை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்திய ஆங்கிலப் புலமை உடையவர்கள் அடையாளம் காண கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான ஆசிரியர்களுக்கு வருகின்ற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட வாறு அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் spoken English பயிற்சி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.