• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..

Byகாயத்ரி

May 20, 2022

குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த மூசா யாமக்(38). மூனிச்சில் நடைபெற்ற போட்டியில் உகான்டா வீரர் ஹாம்சா வாண்டதராவை எதிர்கொண்டார். போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது 3வது சுற்றுக்கு முன் மூசா யாமக் குத்துச் சண்டை வளையத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கே மருத்துவ குழு வந்து பார்த்தபோது அவருக்கு மாரடைப்பு என தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குத்துசண்டையில் இதுவரை தோல்வியே சந்திக்காத மூசா யாமக். மேலும் இவரது அனைத்து வெற்றிகளிலும் நாக்-அவுட் மூலம் பெற்றவை என்ற புகழும் உள்ளது. யாமக் ஐரோப்பிய மற்றும் ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.மனிதனுக்கு இறப்பு நொடியில் என்பதை இந்நிகழ்வு காண்பித்துள்ளது.