• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி… ராகுல் காந்தி விருப்பம்..

Byகாயத்ரி

May 16, 2022

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தை கொண்டுவர ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியில் யாராக இருந்தாலும் மக்களை சந்திக்க வேண்டும் என்றும், மக்களை சந்திப்பது தான் இருக்கும் ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.பாகுபாடின்றி அனைவரின் கருத்துக்களையும் காங்கிரஸ் கேட்கும். இதுதான் காங்கிரஸின் டிஎன்ஏ. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் இதற்கு முன் எப்போது இதுபோன்று அதிகமாக இருந்ததில்லை. நீதித்துறை அழுத்தத்திற்கு ஆட்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் கரங்கள் முடக்கப்பட்டுள்ளன. மக்களுடனான பிணைப்பை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள நிறுவனங்களை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.