• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசுப் பேருந்து நடத்துநர் உயிரிழப்பிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…

Byகாயத்ரி

May 14, 2022

செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் நடத்துநர் பெருமாள்(54) மற்றும் பயணி ஒருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பயணி மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றி பயணி தாக்கியதில் நடத்துநர் பெருமாள் படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். ஆனால் நடத்துனர் பெருமாள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகவும் வேதனை அடைந்தார். உயிரிழந்த அரசுப் பஸ் நடத்துநர் தி.பெருமாள் பிள்ளை குடும்பத்தாருக்கு அவரது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த அரசுப் பஸ் நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.