• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நயன்தாராவை வைத்து படம் எதுவும் தயாரிக்கவில்லை…. தோனி தயாரிப்பு நிறுவனம் பதில்….

Byகாயத்ரி

May 14, 2022

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் இதை எதுவும் உண்மை இல்லை என்று தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் சஞ்சய் என்பவர் நயன்தாராவை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் வெளியான தகவல் முற்றிலும் பொய்.

அப்படி ஒரு படத்தை தங்கள் நிறுவனம் தயாரிக்கவில்லை, சஞ்சய் என்பவருடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து புதிய படங்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.