• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

20 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்லூரிகள்… அமைச்சர் பொன்முடி

Byகாயத்ரி

May 9, 2022

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றது. அதில் கேள்வி நேரத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் நேரடி கலந்தாய்வு நடத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறியுள்ளார்.மேலும் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு மொத்தமாக கலந்தாய்வு நடக்கும் திட்டம் இல்லை என்று கூறிய அமைச்சர் 20 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் சென்று படிக்கும் மாணவர்கள் அருகிலேயே படிக்கும் வகையில் அந்தந்த பகுதிகளை தேர்வு செய்து புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.