• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஷவர்மா கடைகளில் அதிரடி ரெய்டு – பழைய சிக்கன் கறிகள் பறிமுதல்

ByA.Tamilselvan

May 6, 2022

ஷவர்மா கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி பழைய சிக்கன் கறிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலியான சம்பவம் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டமேலும் பலர் வாந்தி,பேதி ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.கேரளசம்பவத்தின் ஏதிரொலியாக தமிழகத்திலும் உணவு பாதுகாப்புத்துறையினர் உணவகங்களில் குறிப்பாக ஷவர்மா கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தி ஆபத்தான பழைய சிக்கன் கறிகளைபறி முதல்செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 52ஷவர்மா கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளிலிருந்து 10கிலோ பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் செய்தனர்.பழைய சிக்கன் கறிகளை விற்பனை செய்த 5கடைகளுக்கு நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
சிக்கன் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை ப்ரீட்ஜரில் வைக்க கூடாது, உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.