• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இ-அலுவலகமாக’ மாறப்போகும் தமிழக தலைமைச் செயலகம் ‘-ஐடி துறை தகவல்

ByA.Tamilselvan

May 4, 2022

வரும் ஜூன் மாதத்திற்குள் தமிழக தலைமைச் செயலகத்தை இ-அலுவலகமாக (இ-ஆபீஸ்) மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு முதல்வரின் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட சில துறைகள் இ-அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், காகிதப் பயன்பாட்டை குறைக்கவும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் இ-அலுவலகமாக (இ-ஆபீஸ்) திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் மூலம் பணியாளர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமில்லாமல் ஆற்றல் மிகுந்த அரசு இயந்திரத்தை உருவாக்க இயலும் என்றும் அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாளுவதில் உள்ள இடர்பாடுகள் களையப்படும் என்று தகவல் தொழில் நுட்ப துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அரசுத் துறைகளில் தற்போது 43,359 பேர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜுன் மாதத்திற்கு தலைமைச் செயலகம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இந்த முறையை அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.