• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

எச்சரிக்கை!! இந்த 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு 

Rain

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடியுடன் கூடிய கனமழையும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினம் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் கூறியுள்ளது .

அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை ஒட்டியிருக்கும் தெரிவித்தது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக சேலம் ஏத்தாப்பூரில் 13 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.