• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விக்ரம் பட கேரள ரிலீஸ் உரிமையை வாங்கியது யார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படத்தின் கேரள ரிலீஸ் உரிமை பெரிய தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்த படமும் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

“ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும்.என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம்பிறை,மகாநதி,தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம்.இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.” என விக்ரம் படத்தின் ரயில் புரமோஷன் வீடியோவை ஷேர் செய்து கமல் ட்வீட் செய்திருந்தார். விக்ரம் படத்தின் ஒளிப்பதிவை ‘ஜல்லிக்கட்டு’ புகழ் கிரிஷ் கங்காதாரன் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அடுத்தபடியாக விக்ரம் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ் மிகப்பெரிய விலைக்கு வாங்கி உள்ளார். அதற்கான ஒப்பந்தம் கையொப்பம் இட்ட நிலையில், எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது ராஜ்கமல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது..