• Tue. Apr 30th, 2024

ரூ.4,500 லஞ்சம்; பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

By

Sep 3, 2021

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி.  இவர் மீது அபி&அபி வாகன விற்பனை நிறுவனத்தின் மேலாளர்கள் அருண் மற்றும் அந்தோணி யாகப்பா இருவரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், தங்களது நிறுவனத்தில் இருந்து புதிதாக விற்பனை செய்து, பதிவு செய்த லோடு ஆட்டோவுக்கு 2,500 ரூபாயும், ஏற்கனவே பதிவு செய்த இரண்டு வானங்களுக்கான ஆர்.சி. புக்கிற்காக 2 ஆயிரம் ரூபாயும் மொத்தம் 4,500 ரூபாயை லஞ்சமாக புரோக்கர் கார்த்திகேயன் மூலம் கலைச்செல்வி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பணத்தில் ரசாயன பவுடர் தடவி அருண் மற்றும் அந்தோணி யாகப்பா இருவரிடமும் கொடுத்தனுப்பினர். புரோக்கர் கார்த்திகேயன் அந்த பணத்தை வாங்கி கலைச்செல்வியிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *