• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பேசிக்கிட்டிருக்கோம்.. இன்னும் முடிவுக்கு வராத ‘இந்தியன் 2’!

By

Sep 2, 2021 , ,

இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பாக லைகா நிறுவனமும் சங்கரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது,லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லைகா மற்றும் சங்கர் தரப்பில் தனிபட்ட முறையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருவதால் பேச்சு வார்த்தை முடித்து முடிவு காண்பதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என லைகா தரப்பில் தெரிவிக்கபட்டது.

இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான் என்று சங்கர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.