• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உலக ட்ரெண்ட் ஆனது கே.ஜி.எப்!

கன்னட திரைப்பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப்-2 திரைப்படம் தியேட்டர்களில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. இந்த படத்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தில் நடித்தன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ள நடிகர் யாஷ், பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார். கே.ஜி.எஃப்-2 திரைப்படம் முதல் நாளில் 130 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த நிலையில் தற்போது உலக அளவில் 650 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் உலகின் மிக பிரபலமான கால்பந்து அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி அணி நிர்வாகம் கே.ஜி.எஃப் திரைப்படத்தை பெருமைப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்கார்ரகளான Kevin de Bruyne, İlkay Gündoğan மற்றும் Phil Foden ஆகிய மூவர் பெயர்களின் முதல் எழுத்தை குறிப்பிட்டு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி நிர்வாகம் பதிவிட்டுள்ளது. ”இது எங்களின் KGF” என குறிப்பிட்டுள்ள அந்த பதிவை இந்திய ரசிகர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதுவரை அந்த பதிவை 2.20 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இதனிடையே பாலிவுட் இயக்குநரும் நடிகருமான ஃபரன் அக்தர், அந்த பதிவில் ”brilliant” என கமெண்ட் செய்துள்ளார். மேலும் கே.ஜி.எஃப்-2 படத்தில் ரேமிகா சென் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை ரவினா டாண்டன், “Awesome!” என பதிவிட்டுள்ளார்.

மேலும், ‘ராக்கி பாய் சி.இ.ஓ ஆஃப் மான்செஸ்டர்’ எனவும், ‘இந்த கே.ஜி.எஃப் மான்செஸ்டர் அணி மேலாளரான Pep Guardiola-வின் தயாரிப்பு’ எனவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ கே.ஜி.எஃப் காய்ச்சல் மான்செஸ்டர் அணிக்கும் தொற்றிக்கொண்டது என உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.