• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகள்..

Byகாயத்ரி

Apr 19, 2022

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதிலளித்து வருகிறார். தமிழகத்தில் புதிய தொழில் பூங்காக்கள், சிபிக்காட், சென்னை அருகே விமான நிலையம் போன்ற புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.